ஹலோ… ட்ரம்ப் பேசறேன் மோடி ஜி ….

குட்மார்னிங் பிரசிடெண்ட் ஜி … ரொம்ப நேரமா ஒரே நம்பர்லயே ரிசல்ட் நிக்குதே? என்ன ஆச்சு பூத் கேப்ச்சரிங் பண்றீங்களா? ஜெயிச்சாச்சா?

எங்கே ஜெயிக்கறது? பைடன்தான் முந்திட்டான்… எல்லாம் போச்சு… அதான் ஒரு ஆறுதலுக்கு ஒங்களுக்கு ஃபோன் பண்ணேன்….

எது? ஜெயிக்கலையா? என்னய்யா ட்ரம்பு…இப்படி பண்ணிட்டே… ஒன் பதவி ஏற்பு விழாவுக்கு …நான் புதுசா வாங்கின ஃப்ளைட்ல வந்து… தமிழ்ல திருக்குறள் சொல்லலாம்னு இருந்தேன்… ஏகப்பட்ட ட்ரஸ் வேற….ரெட் இந்தியன் மாதிரி தலையில பிரம்பு கூடை கோவணம்லாம் தைச்சி வச்சிட்டேனே….

என்ன மோடி ஜி … எப்பவுமே மிஸ்டர் பிரசிடெண்ட்னு கூப்பிடுவீங்க… இப்ப ட்ரம்புன்னு சொல்றீங்க….!

பதவி போனவனுக்கு என்னய்யா மரியாதை? இனி சொந்த காசுலதான் சோறு திங்கணும்…பெட்ரோல் போடணும்… அய்ய்யய்ய சொந்த காசை செலவு பண்றவனை பார்த்தாலே எனக்கு புடிக்காது…. அது சரி நீ 200 + இடம் ஜெயிச்சதா போட்ருந்தானுங்களே ஏன் பிரதமர் ஆகலை?

அது எப்படிங்க ஜி முடியும்? கான்ஸ்டிடியூஷன் லா படி 270 வேணுங்களே…

புரியலைய்யா? எங்களுக்கு ஒரே ஒரு எம்எல்ஏ போதும் நாங்க ஆட்சியை புடிப்போம்… ஒரே ஒரு எம் பி இருந்தான்னா பிரதமரே ஆகிடுவோம்……!

அப்படியா? ஜி… ஓ காட்..

என்ன இதுக்கே மல்லாந்துட்டே? எம்.எல்.ஏ.வே இல்லை…ஆனா நாங்கதான் ஆட்சி நடத்தறோம் தமிழ்நாடுங்கற எடத்துல….போவியா? வந்துட்டான் ஆச்சரியப்பட…
இரு இன்னொரு லைன்ல போன் வருது….வெயிட் பண்ணு… ஹலோ ஆங் யாரு மிஸ்டர் பைடனா…சொல்லுங்க பிரசிடெண்ட் ஜி… வாழ்த்துக்கள்…ஓ ஷ்யூர் வந்து கலந்துக்கறேன்…தேங்க்ஸ்….எதே….ட்ரம்பா? அந்தாளை பார்த்தாலே எனக்கு காண்டாவும்ங்க… நீங்க ஜெயிக்கணும்னு நான் ராமர்ட்ட வேண்டாத நாளில்லை பிரசிடெண்ட் சார்………வச்சிடறேன் சார்…டேய் …. பி ஏ கட்றா வண்டியை…. ஏத்துங்கடா கேமராவை….

சார் அந்த லைன்ல ட்ரம்ப் ரொம்ப நேரமா வெயிட்டிங்….

ட்ரம்பா யார்றா அவன்… நாங்க அத்வானியையே கழட்டி விட்டவய்ங்க…இவன் என்ன ஜுஜுபி…. கட் பண்றா லைனை….. !

கிர்ர்ர்!
Mohamed Rafiudeen போஸ்ட்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.