“கோயிலுக்கு உள்ள போனதுக்காக அந்த பசங்களை அடிச்சது யாரு?”
“சத்குருவோட ஆளுங்க சார்”
“சத்குரு யாரு?”
“சத்குரு… அவரு ஒரு பெரிய மஹான்”
“அவரு உயர்ந்த ஜாதிய சேந்தவரா?”
“ஆமா, பிராமின் சார்…”
“அடி வாங்கி கெடக்குற பசங்க என்ன ஜாதி?”
“அவனுங்க எஸ்சி சார்”
“நம்ம இன்ஸ்பெக்டர் போஸ்பாண்டி என்ன ஜாதி?”
“தேவர் சார்…”
“அது பிராமினா சத்திரியனா வைஸ்யனா?”
“அவங்க சத்திரியால வருவாங்க சார்”
“நீங்க என்ன ஜாதி?”
“நாங்க வன்னிய படையாச்சி கவுன்டர் சார், எம்பிசி-ல வருவோம்”
“ஓ… நீங்க தான் தனி நாடு வேணும்னு கேட்குற கோஷ்டியா?”
“அது நாங்க இல்ல சார், அவங்க கொங்கு வேளாள கவுன்டர், இருந்தாலும் நாங்களும் கவுன்டர் மாதிரி தான்”
“வேலவன் சார், நீங்க தலித் தானே?”
“ஆமா சார்…”
“அங்க அடி வாங்கி காயத்தோட இருக்க பசங்க உங்க ஜாதியா?”
“அய்யய்யோ… இல்ல சார், நாங்க தேவேந்திரகுல வேளாளர், அவங்க அருந்ததியர், நாங்க அவங்கள விட மேல இருக்கவங்க, சொல்லப் போனா எஸ்சிலயே நாங்க தான் பெரிய ஆளுங்க, அருந்ததியர் வீட்டுல கை கூட நனைக்க மாட்டோம்…”
“அப்போ உங்க வீட்டுல நான் கை நனைக்கக் கூடாது, அப்டி தானே?”
“கரெக்ட் சார்?”
“என்னது, கரெக்ட்டா!! துளசிராம் நீங்க என்ன ஜாதி?”
“நான் சவுராஷ்ட்ரா சார்”
“சவுராஷ்ட்ரா என்ன கேட்டகிரியில வரும்?”
“நாலு கேட்டகிரியிலுமே வர மாட்டோம் சார், நாங்க தனி ஆளுக”
“சரி… நான் யாரு?”
“நீங்க பிராமின் சார்…”
“அப்போ சத்குருவும் நானும் சரிக்கு சமமா?”
“இல்ல சார் நீங்க அய்யர், அவர் அய்யங்கார், அவர் பிராமின்லயே உசத்தி”
“த்தா என்ன எழவுடா இதெல்லாம்?”
அதாவது ஆர்ட்டிகள் 15 படம் நெஞ்சுக்கு நீதியா வரும் போது இந்தில வர்ற முக்கியமான அந்த காட்சி தமிழ்ல வந்தா எப்டியிருக்கும்னு சின்னதா ஒரு கற்பனை…
– மலர் வண்ணன்.
(இதுவரை படத்தில் இப்படி இல்லைனா கூட சேர்த்துருங்க. இல்லைனா இந்த படத்தை தமிழில் ரிமேக் செய்து பலனில்லை.)