‘சும்மா ஒரு எட்டு’ லண்டன் போய்வந்ததை இப்படி எட்டுகாலச் செய்தியாய் போட்டு மானத்தை வாங்குகிறார்களே’ என்று புலம்பித் தவிக்கிறார், ஷூட்டிங் எதுவும் இன்றி வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கும் அமலாபால்.
அமலாவின் காதலர்கள் விஜய்-விக்ரம் காம்பினேஷனில் உருவாகிவரும்,’ தாண்டவம்’ படப்பிடிப்பு லண்டனில் கடும் குளிர்ப்பிரதேசம் ஒன்றில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பை சும்மா வேடிக்கை பார்ப்பதற்காக கடந்தவாரம் அமலா லண்டன் சென்றிருந்தார்.அங்கு அப்படியே சில தினங்கள் தங்கியிருந்த அமலா, இயக்குனர் விஜயுடனும், அக்கா அனுஷ்காவுடனும் மட்டும் தங்கியிருந்துவிட்டு, விக்ரமை கண்டுகொள்ளாமல் திரும்பிவிட்டாராம்.
இதனால் கடுப்பாகிப்போன விக்ரம்தான் தனது மீடியா நண்பர்கள் சிலருக்கு போனைப்போட்டு, மேற்படி மேட்டரை கொஞ்சமும் வெக்கமின்றி ‘போட்டுக்குடுத்தாராம்’. விக்ரம் தன்னையும் அமலாவையும் போட்டுக்குடுத்த விஷயம், உதவியாளர்கள் மூலம் இயக்குனர் விஜய்யின் காதுக்குப்போய்விட, பதிலுக்கு தாண்டவமாட தக்க தருணம் பார்த்து காத்திருக்கிறாராம் விஜய்.
கதைகளை சுடுறதுக்கு டி.வி.டி.கள் இருக்கிறதால, வேற வேலவெட்டி இல்லாம இப்பிடித்தான் போகுதாப்பு உங்க பொழப்பு?