கொம்பன் படத்தில் கார்த்தியை வைத்து தேவர் சமூகத்தை பெருமையாக வைத்துக் காட்டிய முத்தையா தனது அடுத்த படமான மருதுவிலும் அதே ஸ்டைலை அதிகப்படுத்தியிருக்கிறார்.
விஷால், ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் இந்தப் படம் மே 20ல் ரிலீசாக இருக்கிறது. பாட்டி பேரன் பாசக் கதை என்று முத்தையா சொல்லி வந்த நிலையில், நேற்று படத்தை சென்சாருக்கு போட்டுக் காட்டினார்களாம். படத்தைப் பார்த்த சென்சார் படம் முழுவதும் தெறித்த ஜாதி வெறி தெறிக்கும் வசனங்களையும், காட்சிகளையும் பார்த்து முகம் சுளித்தார்களாம். விளைவு, படம் முழுவதும் ஏகப்பட்ட வெட்டுக்கள்.
படம் பார்த்துவிட்டு முத்தையாவைத் தனியாகக் கூப்பிட்டு சமூக அக்கறையோடு படம் எடுங்கள், இப்படி ஜாதி வெறியை வளர்க்கும் படங்கள் எடுக்காதீர்கள் என்பது துவங்கிப் பலவிதமாக அட்வைஸ் செய்தார்களாம். அத்தோடு படத்துக்கும யுஏ சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள்.
இதைக் கேட்டு விஷால் அப்செட்டாகிப் போனாராம். படத்துக்கு வரிவிலக்கு கிடையாது என்பதோடு தன் மீது ஜாதி முத்திரை எதுவும் குத்தப்படுவதையும் அவர் விரும்பவில்லை. ராஜபக்சே பினாமி லைக்கா நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.