பாய் ஒரு அரைகிலோ கறி கொடுங்க…!

ஏன் தம்பி அரைகிலோ? எப்பவுமே ஒரு கிலோ வாங்குவிங்க இப்போ ஏன் அரைகிலோ? காசு ஏதாவது இல்லையா? ஒரு கிலோ எடுத்துடு போங்க பொறுமையா காசு கொடுங்க,

காசுலாம் இருக்கு பாய்…மனசு தான் சரியில்ல, கறி எடுக்க வேணாம்னு தான் நெனைச்சேன் அக்கா பசங்களுக்காக எடுக்குறேன் பாய் அதன் அரைகிலோ,

ஏன் ஏதாவது பிரச்சனையா தம்பி?

நம்ப வீட்டு பக்கத்துல 5 ஹிந்திக்கார பெண்ணுங்க வாடகைக்கு இருக்காங்க, அவங்க 5 நாளா வீட்ட விட்டு வெளியில வரலையாம், என்ன ஏதுனு விசாரிச்சா தான் தெரியுதாம் அவங்க எல்லோரும் கம்பெனியில contract labor”ah இருக்காங்களாம், contract”க்காரன் ஊரடங்கு போட்டதுல இருந்து அவங்களுக்கு சம்பளமே போடலையாம், இது நாள் வரையிலும் கையில இருந்த காச வெச்சி manage பன்னிடாங்களாம், இப்போ சுத்தமா கையில காசு இல்லையாம்,யாரு கிடையும் காசு வாங்க மனசு வரமா 5 நாளா தண்ணீ மட்டும் குடிச்சிடு இருந்து இருக்காங்க, இத விசாரிச்ச அப்புறம் தான் தெரிஞ்சிதாம், இத கேள்வி பட்டு அக்கம் பக்கதுல இருந்தவங்க எல்லோரும் அவங்களால முடிஞ்ச அளவுக்கு,அரிசி,பருப்புலாம் கொடுத்து இருக்காங்க, அப்போ கூட அவங்க வாங்கலையாம் force பண்ணி கொடுத்ததும் தான் வாங்கி இருக்காங்க, இப்போ தான் எனக்கு இந்த விசியம் தெரிஞ்சிது அதன் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு பாய்,

அய்யோ பாவம்,நீங்க என்ன பன்னபோறிங்க தம்பி,

“அக்கம் பக்கதுல இருக்கவங்க கொடுத்த அரிசி அவங்களுக்கு ஒரு வாரம் வருமாம்,என்கிட்ட ஒரு 2ஆயிரம் இருக்கு பாய்,நாளைக்கு ஒரு பத்து கிலோ அரிசி,கொஞ்சம் மளிகை சாமன்,கொஞ்சம் காய்கறி வாங்கி கொடுக்கலாம்னு இருக்கேன் பாய்,

ஹ்ம்…நல்லது தம்பி,சரி பாய் டைம் ஆச்சிவரேன் பாய்னு சொல்லிடு அங்க இருந்து வந்துட்டேன்.

Night சரியா சாப்பிடவும் இல்ல,சரியா துங்கவும் இல்ல,மனசு fulla ரொம்ப கஷ்டமாவே இருந்துச்சி,காலையில ஒரு 7 மணியிருக்கும் நல்ல துங்கிடு இருந்தேன்,Phone விடமா அடிச்சிட்டே இருந்துச்சி,பாதி துக்கத்துலையே phone ah எடுத்தேன்,தம்பி நான் கறி கடை பாய் பேசுறேனு சொன்னாரு..

ஹ்ம் சொல்லுங்க பாய்,

தூக்கத்துல disturb பன்னிடனா தம்பி,

அதலாம் எதுவும் இல்ல பாய் எழுந்துட்டேன்,சொலுங்க பாய்,

கொஞ்சம் கடை வரைக்கும் வந்து போறிங்களானு கேட்டாரு,

ஹ்ம் வரேன் பாய்னு சொல்லிட்டு phone”ah cut பன்னிட்டேன்,

ரெடி ஆகி சாப்பிடு நேர கடைக்கு பேனேன், கடையில ஒரு 4 பேரு கறி எடுக்க wait பன்னிட்டு இருந்தாங்க, நான் நேர பாய் கிட்ட போய், என்ன பாய் வர சொல்லி இருந்திங்கனு கேட்டேன்.

தம்பி கொஞ்சம் நேரம் wait பன்னுங்கமுடிச்சிடு வந்துடுறேனு சொன்னாரு, சரிங்க பாய்னு சொல்லிட்டு, நான் phone ஐ நோண்ட ஆரம்பிச்சிட்டேன், அவரு அவங்க எல்லோருக்கும் கறிய கொடுத்து அனுபிச்சிடு தம்பி வாங்னு கூப்பிடாரு, நான் கடை உள்ள போனேன், அவரு உள் room la இருந்து 25கிலோஅரிசியை தூக்கிடு வந்தாரு,

தம்பி இத எடுத்துடு போய் நேத்து சொன்னிங்களே அவங்க கிட்ட கொடுத்துடுங்கனு சொன்னாரு, எனக்கு ஒரு நிமிஷம் என்ன சொல்றதுனே தெரியல!

எதுக்கு பாய் உங்களுக்கு இந்த கஷ்டம்னு கேட்டேன்,”அவரு சிரிச்சிட்டே இதல என்ன தம்பி கஷ்டம் இருக்கு, நம்ப கிட்ட குடிக்க கஞ்சி ஆச்சும் இருக்கு, ஆனா பாவம் அவங்க கிட்ட அது கூட இல்ல, அதுவும் அவங்க நம்ப நம்பி தானே இங்க வந்து இருக்காங்க,நாம தான் அவங்களா பார்த்துக்கனும், night fulla துக்கமே வரல தம்பி, அதான் காலையில முத வேலையா போய் அரிசி வாங்கிடு வந்துட்டேனு சொன்னாரு”,

அவரு சொல்லி முடிச்ச அந்த second என்னையும் அறியம கண்ணு கலங்கிடிச்சி,கலங்குன கண்ண அவரு கிட்ட காட்டிக்காம, தட்டு தடுமாறி ரொம்ப thanks பாய்னு சொன்னேன்,

அவரு திரும்பவும் சிரிச்சிடே இதல என்ன இருக்கு தம்பினு சொன்னாரு,

பாய் அரிசி மூட்டை பக்கத்துல நில்லுங்க ஒரு போட்டோ எடுத்துக்கோங்கனு சொன்னேன், அவரு உடனே பதறிட்டு தம்பி போட்டோலாம் வேணாம்பா” நான் விளம்பரத்துக்கு பன்னல, அடுத்தவங்க பசில இருக்கும் போது நாம மட்டும் எப்படி பா சாப்பிட முடியும்னு சொன்னாரு”

அவரு செஞ்ச உதவியும்,அதுக்கு அவரு கொடுத்த விளக்கமும் எனக்கு மிக பெரிய ஆச்சரியமா இருந்துச்சி, அந்த ஹிந்திக்காரங்க யாருனு அவருக்கு தெரியாது, அவங்கள இவரு முன்ன பின்ன பார்த்தது கூட கிடையாது ,அவங்களால இவருக்கு கொஞ்சம் கூட லாபம் கிடையாது, எடுத்த உடனே கொடுத்து உதவுறதுக்கு இவரும் பண பலம் படைச்சவரு கிடையாது, வாடகை கடை தான், வாடகை வீட்ல தான் இருக்காரு, அதுவும் இந்த 144″ ல இருந்து இவரு டெய்லி 2 மணி நேரம் மட்டும் தான் கடை திறக்குறாரு, இவர் வாங்கி கொடுத்த இந்த ஒரு மூட்டை அரிசி தான் அவருடைய இந்த ஒரு வார லாபமா இருக்கும்,

#மனிதம் என்ற வார்த்தை இன்னும் உயிரோடு இருக்கிறது என்றால் இவர்களை போன்று எந்த பலனும் எதிர்பாராமல் உதவும் மனிதர்களால் மட்டுமே

– Gowtham Surya பதிவு. https://www.facebook.com/gowtham.chennai73/posts/2709619209165957

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.