வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் புஷ்கர் மற்றும் காயத்ரி , ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கிய இந்த அமேசான் ஒரிஜினல் தொடர்  ஸ்ட்ரீமிங் வெளியீட்டில் பன்முகத் திரைப்படக் கலைஞர் எஸ்.ஜே. சூர்யா தனது அறிமுகத்தை தொடங்குகிறார்.  

வெலோனி என்ற பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கும் சஞ்சனாவும் இந்தத் தொடரில் முதல் முதலாக அறிமுகமாகிறார், மற்றும்  லைலா, எம். நாசர், விவேக் பிரசன்னா, குமரன், மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் அடங்கிய ஒரு நட்சத்திரப்பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள்,  டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம் மியூசிக் இசை, இந்தியாவின் மிகப்பெரிய  தயாரிப்பு  வரிசை தேர்வுகளை விரைவாகவும் இலவசமாகவும் வழங்கல், மதிப்பு மிக்க  சலுகைகளை எளிதாக அணுகும் வசதி, பிரைம் ரீட்டிங்கில் எல்லையற்ற வாசிப்பு, பிரைம் கேமிங்கின் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், ஆகியவைகளோடு பணத்துக்கான ஒரு பிரமிக்கத்தக்க மதிப்பை அமேசான்  பிரைம் வழங்குகிறது. இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 1499 மட்டுமே உறுப்பினர்  சந்தா செலுத்துவதன் மூலம் கிடைக்கும்

மும்பை, இந்தியா—17 நவம்பர், 2022—இந்தியாவில்  மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு மையமாக விளங்கும் பிரைம் வீடியோ, இன்று அமேசான் ஒரிஜினல் தொடரான வதந்தி– தி ஃபேபிள் ஆஃப் வெலோனி திரைப்படத்தின் உலகளாவிய முதல் காட்சி வெளியீட்டை அறிவித்தது. விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்ட சுழல் –தி வோர்டெக்ஸ் (Suzhal –The Vortex,) ஐத் தொடர்ந்து  இந்த அதிர வைக்கும் தமிழ் க்ரைம் த்ரில்லரை, புஷ்கர் (Pushkar) மற்றும் காயத்ரி (Gayatri) இருவரும் இணைந்து  வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரில் தயாரிக்க ஆண்ட்ரூ லூயிஸ் (Andrew Louis) ஆல் உருவாக்கப்பட்டுள்ளது. எட்டு பகுதிகளைக் கொண்ட இந்த த்ரில்லர் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், டிசம்பர் 2 ஆம் தேதி முதல் பிரைம் உறுப்பினர்களுக்கு இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் கிடைக்கும்.
கிசுகிசுக்கள் என்று பொருள்படும் வதந்தி என்ற தலைப்புக்கு இணங்க,  இதன்  அறிமுக நடிகையாக  சஞ்சனா  (Sanjana)  ஏற்றுள்ள இளம் மற்றும் அழகு ததும்பும் வெலோனி என்ற கதாபாத்திரத்தின் வதந்திகளால் நிறைந்த ஒரு புதிரான உலகிற்கு இந்தக் கதைக்களம் உங்களை அழைத்துச் செல்கிறது.  சற்று மனக்கலக்கத்துடன்  ஆனால் மன உறுதியோடு கூடிய  காவல் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யா  (S.J. Suryah), பொய்களால் ஆன ஒரு வலையில் தான் சிக்குண்டுள்ளதை அறிகிறார், ஆனாலும்  உண்மையைக் கண்டறிவதில் தன் விடா முயற்சியை தொடர்கிறார். ஓரு செல்வச் செழிப்பான அடுக்குகளால் ஆன ஒரு சிறிய நகரம்  வெலோனியின் கதையை சிக்கலானதாக ஆக்கும் அதே சமயம் அதை ஒரு புதிரான விந்தைகள் நிறைந்ததாகவும் மாறசெய்கிறது. இந்த திரைப்படத்தில்  லைலா(Laila) , எம். நாசர்,(M.Nasser), விவேக் பிரசன்னா (Vivek Prasanna), குமரன் (Kumaran), மற்றும் ஸ்மிருதி வெங்கட் (Smruthi Venkat) போன்ற பிரபலமான நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். “எங்கள் பார்வையாளர்களின் வளர்ந்து வரும் ரசனைக்கு இணங்க அதற்கு மேலும் அதிகமான தீனியை அவர்களுக்கு வழங்கும் வகையில் உண்மையான, நிலைநாட்டப்பட்ட மற்றும் பல்வேறு வகையான கதைக்களங்களை நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம், அதன் ஒரு தொடர்ச்சியாக வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனியின் கதையை அவர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெரு  மகிழ்ச்சி அடைகிறோம்” என்று பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் இன்  தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார். ” சுழல் – தி வோர்டெக்ஸ்க்குக் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து., புஷ்கர் மற்றும் காயத்ரியுடனான  எங்களின் இரண்டாவது கூட்டு முயற்சியில் உருவான வதந்தி – எங்கள் பிராந்திய உள்ளடக்க வழங்கல்களுக்கு மேலும் வலுவூட்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பண்படுத்தப்படாத, உணர்வுகளின் பின்னணியோடு மனதைக் கொள்ளைக்கொள்ளும் இந்த அற்புதமான திரில்லரை  ஆண்ட்ரூ லூயிஸ் திறம்பட எழுதி இயக்கியிருக்கிறார். ரசிகர்களை அவர்களது இருக்கையில் கட்டிப்போட்ட வைக்கும் உன்னதமான நடிப்புத் திறன் கொண்ட இதன் நட்சத்திர நடிகர்கள்,  தங்களது  சக்திவாய்ந்த மற்றும் மயக்கும் நடிப்பால் இந்தக் கதைக்கு உயிர் ஊட்டியுள்ளனர்.” .

 “இன்றைய ரசிகர்கள் தாங்கள் எதை விரும்பிப் பார்ப்பது என்பதில் ஒரு தெளிவான சிந்தனையை கொண்டிருப்பதால், அவர்களுக்கான ஒரு வித்தியாசமான, தனித்துவம் வாய்ந்த மற்றும் மனதில் ஆழ்ந்து பதியக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட கதைக்களத்தை உருவாக்குவது மிக முக்கியமான ஒன்று என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். குற்றச்செயல்களை கலை வடிவத்தின் ஒரு யுத்தியாக கையாளுவது கதை சொல்வதை ஒரு அலங்காரமற்ற மற்றும் இயற்கையான முழுமையான வடிவத்தில் வெளிப்படுத்துகிறது. வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனியின் மூலமாக, பார்வையாளர்களின் கற்பனாசக்தியை  முழுமையாக வெளிக்கொண்டுவந்து, சமூகத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்குவதே எங்கள் நோக்கம். இந்தக் கதை பார்வையாளர்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், இறுதியில் நன்றியறிவிப்பு வெளியிட்ட பிறகும் நீண்ட நேரத்திற்கு அவர்களை சிந்தனை வயப்படுத்தும்” என்று இந்தத் தொடரின் படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் தெரிவித்தனர்.

 
” எழுத்தாளர்-இயக்குனர்-படைப்பாளி என்ற பன்முகம் கொண்ட ஆண்ட்ரூ லூயிஸுடன் இந்த பரபரப்பான க்ரைம் த்ரில்லரை உருவாக்க ஒரு பொதுவான கண்ணோட்டத்தைப்  பகிர்ந்து கொண்டு இணைந்து பணியாற்றுவதில் நாங்கள்  அருமையாக உணர்ந்தோம். எஸ்.ஜே. சூர்யா போன்ற ஒரு மூத்த கலைஞர் தலைமையிலான ஒரு உன்னதமான திறமையுடன் கூடிய நட்சத்திரக் குழுவோடும் மற்றும் சஞ்சனா போன்ற புதிய  அறிமுகங்களோடும் நிறைந்த இந்தத் தொடர் அதன் இறுதிக் காட்சி வரை ரசிகர்களை கட்டுண்டுகிடக்கச்செய்யும்  .இந்த டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியிடப்படும் வதந்தி ரசிகர்களை நிச்சயமாகக் கவரும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

பிரைம் வீடியோ பட்டியலில் உள்ள ஆயிரக்கணக்கான டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி இணையும். இவற்றில்  இந்திய தயாரிப்பான அமேசான் ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களான மஜா மா, அம்மு, தி ஃபேமிலி மேன், மிர்சாபூர், மேட் இன் ஹெவன், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்!, மும்பை டைரிஸ் 26/11, சுழல் – தி வோர்டெக்ஸ், பஞ்சாயத்து 2, மாடர்ன் லவ் மும்பை மாடர்ன் லவ் ஹைதராபாத், பாடல்லோக், பண்டிஷ் பேண்டிட்ஸ், ஹஷ் ஹஷ், ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ், கில்ட்டி மைண்ட்ஸ், காமிக்ஸ்தான், காமிக்ஸ்தான் செம காமெடி பா, மற்றும் இன்சைட் எட்ஜ் ஆகியவை அடங்கும் . மற்றவற்றுகிடையில் இந்தியத் திரைப்படங்களான, ஷெர்ஷா, சூரரைப் போற்று, தூஃபான், சர்தார் உதம், கெஹ்ரையன், ஜெய் பீம், ஜல்சா, கூலி நம்பர் 1, குலாபோ சிதாபோ, சகுந்தலா தேவி, ஷெர்னி, ஹலோ சார்லி, கோல்ட் கேஸ், நாரப்பா, சாராஸ், சர்பட்டா பரம்பரை,  குருதி, ஜோஜி, மாலிக், வி, , #ஹோம், மற்றும் டக் ஜகதிஷாமங் போன்றவைகளும் மற்றும் விருது பெற்ற பலராலும்  விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜினல்களான லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், தி டெர்மினல் லிஸ்ட், தி டுமாரோ வார், கமிங் 2 அமெரிக்கா, சிண்ட்ரெல்லா, போராட் அடுத்தடுத்த மூவிஃபிலிம், ரீச்சர் , வருந்தாமல், தி வீல் ஆஃப் டைம், அமெரிக்கன் காட்ஸ், ஒன் நைட் இன் மியாமி, டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹன்டர்ஸ், க்ரூவல் சம்மர், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் திருமதி. மைசெல். போன்றவைகளும் அடங்கும். இவை அனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும். இந்த சேவைகள்  ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் வழங்கப்படுகின்றன
ஸ்மார்ட் டி‌வி, மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டி‌வி ஸ்டிக், ஃபயர் டேப்லட்ஸ், ஆப்பிள் டிவி போன்ற இன்னும் பலவற்றுக்கான  பிரைம் வீடியோ ஆப் மூலமாக இந்த சீரீசை பிரைம் உறுப்பினர்கள் எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் காணலாம். பிரைம் உறுப்பினர்கள் வீடியோ ஆப்  இல் எபிசொடுகளை அவர்களது கைபேசி, மற்றும் டேப்லட்டுக்களில் பதிவிறக்கம் செய்து கொண்டு இணைய தொடர்பு இல்லாத இடங்களிலும் எந்த ஒரு கட்டணமுமின்றி காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.